- Advertisement -
நல்ல தூக்கம் ஒரு வரம். அதிக பேருக்கு, இரவு தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள். மறுநாள் காலையில், எழுந்தவுடன் பதற்றத்துடன் காணப்படுவார்கள். ஒரு சிலர் மருத்துவர்கள் பரிந்துரையின்படி தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வார்கள்.
இந்த மாதிரி உள்ளவர்களுக்கு இதோ ஒரு எளிய வழி. ஒரு ஸ்பூன் கசகசாவை லேசா வறுத்து,அம்மியில் வைத்து, மைய அரைத்து அதனுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் பெறலாம். தூக்கம் வராதவர்கள் முயன்று பாருங்கள்.
- Advertisement -