- Advertisement -
தமிழகத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் உள்ள மத்திய அரசின் OCF தொழிற்சாலை குடியிருப்பில் உள்ள, கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மோசஸ் (45), தேவன் (46) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருந்த இவ்விருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Advertisement -