- Advertisement -
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை (செப் .8) கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நாளை வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்ற நாட்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காகச் சென்னையிலிருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படுவதாகத் தெரிவித்தனர்
அதைப்போல்,தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலிருந்து 300 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மேலும், வருகின்ற (செப் .10) ஞாயிறு இரவு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -