- Advertisement -
சமீபத்தில் நடைபெற்ற ‘குஷி’ பட வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “இப்படத்தில் நான் சம்பாதித்ததில் ரூ.1 கோடியை 100 குடும்பங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். உங்களால்தான் நானும் சம்பாதிக்கிறேன்” என்றார்.
மேலும், அவர் ” இதுகுறித்த தகவலை எனது சமூக வலைதளபக்கத்தில் விண்ணப்பம் ஒன்று வெளியிடப்படும். அதில் விண்ணப்பிப்பவர்களில் 100 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கான வாடகை, கல்விக் கட்டணம் கட்ட முடிவெடுத்துள்ளேன்” என்றார்.’
- Advertisement -