- Advertisement -
இந்தாண்டு நடைபெற்று ஆசியக் கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நேபாளத்திற்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில், இந்த ஆசியக் கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் முதல் 4 ஓவர்களுக்குள் 3 எளிதான கேட்சுகளை தவறவிட்டனர். சில பவுண்டரிகளையும் கோட்டை விட்டனர். போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”பீல்டிங் மிகவும் சுமாராக இருந்தது. அணி வெற்றி பெற பீல்டிங் சரியாகச் செய்வது அவசியம். இதில் முன்னேற்றம் தேவை” என்றார்.
- Advertisement -