- Advertisement -
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியானது. இந்த அழைப்பிதழில், ‘இந்தியக் குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்குக் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதால் நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக அரசுத் திட்டம்? என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதேசமயம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை பாரத் என மாற்றவேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -