- Advertisement -
இன்றைய சூழலில் அடித்தட்ட மக்கள் முதல் பணக்காரர்கள் வரை GPay, PhonePe போன்ற UPI பேமெண்ட் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த UPI பேமெண்ட் தளத்தை இனி கிரெடிட் கார்டு போலப் பயன்படுத்த, ‘Pre-sanctioned Credit Line’ எனப்பட்டும் கிரெடிட் தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும் வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, இனி பயனர்களின் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் UPI மூலம் கிரெடிட் தொகையைப் பெற்று செலவு செய்யலாம். இதனால், UPI கட்டணங்கள் மேலும் விரிவடையும் என RBI தெரிவித்துள்ளது
- Advertisement -