- Advertisement -
தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில், நேற்று (செப் .4) இந்திய அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நேபாள வீரர் ஆசிப் ஷேக்கை இந்திய வீரர்கள் பாராட்டினர்.
அதிலும், குறிப்பாக இந்த போட்டி முடிந்தபின்பு, இந்திய அணியின் ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலி அவருக்கு மெடல் அணிவித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இப்போட்டியில் ஆசிப் ஷேக் 58 ரன்கள் அடித்து இந்திய பவுலர்களை அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -