- Advertisement -
இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் செப் .22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்த மசோதா தாக்கல் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில்,இந்த செய்தியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு இந்தியக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆகவே , டெல்லியில் இன்று நடைபெறும் 28 கட்சிகள் இணைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால், எப்படி முறியடிப்பது என விவாதிக்க உள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -