- Advertisement -
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப். 5) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளனர்
- Advertisement -