- Advertisement -
இந்தாண்டு 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கை மைதானத்தில் நேபாளத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று (செப் .4) விளையாடியது. அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 231 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக அளித்தது.
பின்னர், மழையின் காரணமாக 23 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்கள் எந்த விக்கெட் இழப்பின்றி, 20.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இதன்மூலம், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது
- Advertisement -