- Advertisement -
சூரியனை ஆராய்வதற்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலத்தைக் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2வது முறையாக வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது
மேலும், இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள், ” இந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை அடுத்த சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வருகின்ற செப்.10 தேதி மேற்கொள்ளப்படும். தற்போது இந்த விண்கலம் நல்ல முறையில் செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
- Advertisement -