- Advertisement -
நம் நாட்டை ஆளும் ஒன்றிய அரசின் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றத் திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில், இதற்குப் பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள், “நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது” என்றார்.
மேலும், அவர் ” இந்தியா எப்போதும் ‘பாரத்’ ஆகவே இருந்தது; நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம்; திடீரென ஏன் இந்தியா என்ற பெயரைத் துறக்க வேண்டும்?” எனத் தெரிவித்தார்
- Advertisement -