- Advertisement -
உத்திர பிரதேசத்தில் உள்ள பாரபங்கி என்ற பகுதியிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று (செப்.4 ) அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக வந்த மீட்புப் படையினர், 12 பேரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அதில் 2 பேர் அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், இந்த கட்டிட இடிபாடுகளில் இன்னும் 4 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் தற்போது வரை மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -