- Advertisement -
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் புதிதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது எனவும், இது வலுவடைந்து ஆந்திர – ஒடிசா கடல்பகுதிக்கு இடையே நிலைகொள்ளும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
- Advertisement -