- Advertisement -
ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்தும், இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப் .4) உயிரிழந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுக்கு வர்ணனையாளராக பணியாற்றிவர். அதன்படி, இவர் 2012ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக பணியாற்றினார். கடைசியாகச் சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -