- Advertisement -
அமெரிக்காவைச் சேர்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ் சமீபத்தில் நடத்திய உலகின் தலை சிறந்த வங்கித் தலைவர் குறித்து ஆய்வு நடத்தியது. இந்நிலையில், இன்று (செப் .2) இந்த இதழ் வெளியிட்டுள்ள, இப்பட்டியலில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி, தற்போது உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Advertisement -