Wednesday, October 4, 2023 5:47 am

23-வருட காதலை கொண்டாடும் வகையில் வெளிநாட்டில் ஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ! அதுவும் என தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

ராதா ரவியின் கடைசி தோட்டா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ !

நடிகர் ராதாரவி நடிப்பில் உருவாகி வரும் 'கடைசி தோட்டா' படத்தின் செகண்ட்...

துபாயில் விஜய்யின் ‘ரஞ்சிதமே ‘ பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மாந்தன்னா !

ராஷ்மிகா மந்தனா உண்மையிலேயே இந்திய திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர்....

மாதகம் பார்ட் 2 படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சமீபத்திய தமிழ் க்ரைம்-த்ரில்லர் தொடரான மாதகம், ஆகஸ்ட் 18...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு புதிய கோரிக்கைகள் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தயாரிப்பாளர் சங்கம் ஆகும்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகிறார். படம் 2023 நவம்பரில் தீபாவளிக்கு வெளிவரத் தயாராகி வரும் நிலையில், இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடைஅமுயற்சி’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க அவரை அணுகியதாக சமீபத்திய சலசலப்பு.

அஜித்துக்கு எதிராகவும் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் ஒப்புதல் அளிக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இந்த திட்டம் தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், படக்குழு விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருக்கிறாராம். அதனாலேயே அவர் இப்போது ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது விடாமுயற்சி சூட்டிங் துபாயில் தான் முக்கால்வாசி படமாக்கப்பட இருக்கிறது.

அதனால் அஜித் அங்கு தன் சொந்த வீட்டிலேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். சொந்த வீடா அதுவும் துபாயிலா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மைதான். ஏனென்றால் அஜித் இப்போது துபாயில் பிரம்மாண்டமான ஒரு பங்களாவை வாங்கி போட்டு இருக்கிறார்.இந்திய மதிப்பு படி பார்த்தால் அதன் விலை மட்டுமே பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள். வெகு நாட்களாகவே அவர் தன் மனைவி ஷாலினிக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம். அதனாலேயே அவர் துபாயில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை தன் மனைவிக்கு வாரி வழங்கியிருக்கிறார்.

இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயையும் அவர் அடித்திருக்கிறார். அதாவது நாடு நாடாக சுற்றியது வீண் போகலை என்ற கதையாக வெளிநாட்டில் வீடும் வாங்கியாச்சு, மனைவியையும் சந்தோஷப்படுத்தியாச்சு. அந்த மகிழ்ச்சியோடு அவர் இப்போது விடாமுயற்சியிலும் கவனம் செலுத்த இருக்கிறார். இவ்வாறு அஜித் வெளிநாட்டில் பிரம்மாண்ட வீடு வாங்கி இருக்கும் விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பெரிய இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் அபுதாபி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தை ஏப்ரல் 2024 இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்