- Advertisement -
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை, கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று இந்த 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான கால அவகாசமும் இம்மாதம் 30ம் தேதி வரை அளித்திருந்தது
அதன்படி, மக்கள் வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93% நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதில் 76% வைப்புத் தொகையாகவும், 13% மற்ற மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -