- Advertisement -
சில தினங்களுக்கு நடிகை விஜயலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது புகார் அளித்திருந்தார். அதில், அவர் ” தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக” இந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் குறித்து நாதக கட்சித் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் நிருபர்களால் கேள்வியெழுப்பட்டது. அதற்கு, அவர் ” ஒரு நாள் நான் வெடித்துச் சிதறுவேன், அப்போது ஒருவரும் தாங்கமாட்டீர்கள். நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன், நீங்கள் 2 லட்சுமிகளைக் கொண்டுவந்து அவதூறு வீசுகிறீர்கள். நான் அமைதியாக இருப்பதனால், என்னுடைய மௌனத்தால், விஜய லட்சுமி சொல்வது எல்லாம் உண்மை ஆகாது” என ஆவேசமாகக் கூறினார்.
- Advertisement -