- Advertisement -
இந்த ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் தொடரில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், இன்று (செப்.2) பிற்பகல் 3 மணியளவில் இலங்கை மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய -பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இந்த இந்திய , பாக்கிஸ்தான் மோதும் குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள், “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறுவேன். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இந்தியா வலிமையான அணியாக இருக்கிறது. இந்தியாவின் டாப் 3 வீரர்களில் யாராவது ஒருவர் சதம் அடித்தாலே 300 ரன்களை எளிதில் கடந்துவிடலாம்” என்றார்
- Advertisement -