- Advertisement -
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு, டெல்லியில் இன்று (செப் .2) காலை 8.30 முதல் 12.00 மணி வரை , மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை , 7மணி முதல் 11 மணி வரை முழு ஒத்திகை நடைபெற உள்ளது.
இதனால் இந்த நேரங்களில் டெல்லியில் உள்ள பஞ்சீல் மார்க், சர்தார் படேல் மார்க்-கௌடில்யா மார்க், கோல் மேத்தி ரவுண்டானா, மான்சிங் சாலை ரவுண்டானா, சி-அறுகோணம், மதுரா சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்பதால் மக்கள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -