- Advertisement -
தமிழகத்தில் மறைந்த முன்னாள் கலைஞரின் 100வந்து இந்தாண்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவாகத் தமிழக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்டங்கள் ஆகியவை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு, வருகின்ற செப்டம்பர் 16,17,18 ஆகிய நாட்களில், சென்னை தீவுத் திடலில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த உணவு திருவிழாவில், சிறுதானிய வகைகள், நெல் ரகங்களின் வகைகள் உள்ளிட்டவை குறித்தான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது
- Advertisement -