- Advertisement -
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் இன்று (செப்.2) ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெறுகிறது.
இந்நிலையில், இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் புறப்பட்ட 63வது நிமிடத்தில் பூமியிலிருந்து சுமார் 19,500 கிமீ சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ சற்றுமுன் தகவல் அளித்துள்ளது .
- Advertisement -