- Advertisement -
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களான மைக்கேல் மதன காம ராஜா’, ‘குணா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்.2) உடல்நலக் குறைவால் காலமானார்.
அதேசமயம், இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய வசனம், “ தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க ” என்ற வசனம் தமிழ் னிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் தற்போது இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் , பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -