- Advertisement -
இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் தற்போது வரை பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பலியானதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
மேலும், 2,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சரிந்து விழுந்த மரம், மின் கம்பங்களைச் சீராக்கும் பணிகள் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தனர்
- Advertisement -