- Advertisement -
நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு தரப்பிலும் மற்றும் கர்நாடக அரசு தரப்பிலும் தீவிரமாக விசாரித்த பின் தமிழகத்தில் மாதந்தோறும் அனுப்பப்படும் காவிரி நீரை 5000 கனஅடி திறக்க உத்தரவிட்டது. அதன்படி, கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்குள் காவிரியிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது
இந்நிலையில், தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நேற்று (ஆக .30) விவசாயிகள் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Advertisement -