- Advertisement -
சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதையடுத்து அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மேலும், அவர் ” தற்போது நம் நாட்டில் கேஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடி இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் கூட ஆச்சரியமில்லை” என அதிரடியாகத் தெரிவித்தார்.
- Advertisement -