- Advertisement -
இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (ஆக .30) முதல் வருகின்ற செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. மேலும், இந்த தொடரின் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன.
அதேசமயம், இலங்கையில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தை வருகின்ற செப்.2 ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -