- Advertisement -
நேற்று (ஆக .29) தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று பெய்த கனமழை பெய்திருக்கிறது. அப்போது, இந்த கனமழை காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் அரசு உதவிபெறும் பள்ளியில் எதிர்பாராத விதமாக மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த இரு மாணவிகள் மீது விழுந்தது.
இதில் மாணவி சுஷ்மிதா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், இச்சம்பவத்தை அறிந்து இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி, படுகாயமடைந்த மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியுடன் வழங்குவதாக அறிவித்துள்ளார்
- Advertisement -