- Advertisement -
சில தினங்களுக்கு முன் உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தா இன்று (ஆக .30) தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இவருக்கு, மாநில அரசு சார்பில் மேளதாளம், கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்கள், ” மக்கள் திரண்டு நின்று வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார். மேலும், இவர் தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை விமான நிலையத்திலிருந்து அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று கௌரவிக்கப்பட்டார்
- Advertisement -