- Advertisement -
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்கள் சந்திப்பில் கோடநாடு வழக்கு குறித்துப் பேசினார். அதில், அவர் ” நம் நாட்டில் எத்தனையோ சம்பவம் நடந்தாலும் திமுகவினர் கோடநாடு சம்பவத்தைத் திட்டமிட்டுப் பேசுகின்றனர்” என்றார்.
மேலும், அவர் ” இந்த கோடநாடு வழக்கு 90% வழக்கு முடிந்த நிலையில் அதனை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன்? அதிமுக குற்றவாளியைக் கண்டறிந்தால் அவர்களுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும்” என அதிரடியாகக் கூறியுள்ளார்
- Advertisement -