- Advertisement -
வானியல் அதிசயங்களில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன் இன்று (ஆக .30) தோன்றுகிறது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சூப்பர் ப்ளூ மூன் என்றால் என்ன ? பலரிடம் இக்கேள்வி மனதில் எழுகிறது.
அதன்படி, இந்த ப்ளூ மூன் என்பது பார்ப்பதற்கு நீல நிறத்தில் தான் என்பது அவசியமில்லை. இது ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளிக்கும். மேலும், இது நிலவின் சுற்றுவட்டாரப் பாதையில் குறைவாக இருக்கும் சமயத்தில் பௌர்ணமி தோன்றுவதே இந்த ப்ளூ மூன் ஆகும். இது வழக்கமான நிலவின் அளவை விட 14% அதிகமாகக் காட்சியளிக்கும். இந்த நிகழ்வை இன்று (ஆக .30) காணத் தவறினால் மீண்டும் 2032ஆம் ஆண்டு தோன்றும் என்கின்றனர்
- Advertisement -