- Advertisement -
சந்திரயான் 3 வெற்றி தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
இந்த விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டமிட்டபடி 4 மாதங்கள் தொடர் பயணத்திற்கு பின் இந்த விண்கலத்தை நிலைநிறுத்தப்பட்டு சூரிய புயல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்சிகளை நடத்தவுள்ளது. இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய, பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலமாக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படவுள்ள ஆதித்யா L1 விண்கலம், தற்போது ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -