- Advertisement -
தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த இ-சேவை மையங்களில் புது சேவையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இனி தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தத் தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தீட்டியுள்ளது.
மேலும், இச்சேவையைச் செயல்படுத்த, இ-சேவை மையங்களைப் பயன்படுத்த DigiPay என்ற வரம்பிற்குள் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்கின்றனர்.
- Advertisement -