- Advertisement -
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நேற்று நடைபெற்ற காவிரி குழுக் கூட்டத்தில், தமிழக சார்பாக மாதந்தோறும் வழங்கப்படும் தண்ணீரை வழங்கக் கர்நாடகாவிற்கு உத்திரவிட கோரினர். அதற்குக் கர்நாடக அரசு , தங்களுக்கு போதுமான நீர்ப்பிடிப்பு இல்லை எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இருதரப்பும் முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று (ஆக .29) டெல்லியில் கூடுகிறது. அதில், மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் மூலமாக வாடும் பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்குமா? என்ற டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்
- Advertisement -