- Advertisement -
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அடக்குமுறையைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி, அங்குப் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது. அதில், பெண்களுக்குப் பள்ளிகளிலும், பல்கலைக் கழகத்திலும் படிக்க அனுமதி மறுப்பு, பெண்கள் தனியாகப் பயணிக்கக் கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, பூங்கா, ஜிம் போன்ற இடங்களுக்குச் செல்லக் கூடாது என அடுக்கடுக்காக புதிய கட்டுப்பாட்டுக்களை விதித்து வந்தது.
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழையப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத் அவர்கள், ” பெண்கள் சுற்றுலாத்தலங்களைக் காண்பது அவசியமற்ற ஒன்று. இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை. பெண்களைப் பூங்காவின் நுழைவாயிலிலேயே தடுத்த நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
- Advertisement -