- Advertisement -
பிரபல நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில்,” நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கைது செய்ய வேண்டும். அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான்” எனக் கூறியுள்ளார்.
மேலும், அந்த புகாரில், ” ஆனால், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது அவரால்தான் இப்போது வரை அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன். அப்போது சீமானைக் காப்பாற்றியது அதிமுக அரசு எனக் குறிப்பிட்டு இதைச் செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
- Advertisement -