- Advertisement -
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக. 29) கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பில் கோவையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகச் செப்டம்பர் 2ம் தேதி முழு பணி நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல், சென்னை , திருப்பூர், கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களும் நாளை கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற செப்.2 ஆம் தேதி பணி நாளாகத் தொடரப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- Advertisement -