- Advertisement -
நிலவில் வெற்றிகரமாகச் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ சார்பில் சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதியில் ண்ணில் ஏவப்பட உள்ளது என் இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விண்கலம் சூரியனின் காந்தப் புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் அனுப்ப இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -