- Advertisement -
கேரளா மக்களால் நாளை (ஆக .29) ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், தற்போது கேரளாவே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் கொல்லத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அப்சனா பர்வீன் தலைமையில் ஓணம் கலை விழா நேற்று (ஆக .27) நடந்தது.
இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட ஆட்சியர் அப்சனா பர்வீன் திடீரென எழுந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -