சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், பேருந்து நிலையம் திறக்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டே வருகிறது. தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்க இருக்கிறது.
இதுகுறித்து, தமிழக அமைச்சர் சேகர் பாபு, ” சென்னையில் “மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்துச் சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கட்டமைத்துள்ளனர். ஆகவே, தற்போது புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றார்.