- Advertisement -
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்ய இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவப்படுகிறது. அப்படி, புவியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவு வரை சென்று சூரியனை ஆய்வு செய்ய உள்ளது என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது
மேலும், இந்த விண்கலம் சுமார் 1500 கிலோ எடை, ரூ. 378 கோடி பட்ஜெட் (அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை), 100 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், சூரிய மேல் வளிமண்டல இயக்கவியல் பற்றியும், சூரியன் வெப்பத்தை வெளியிடும் இயக்கவியல் குறித்தும் ஆய்வு செய்யும் என்றும், அப்போது சூரியனின் காந்தப்புலம் மற்றும் அதன் அளவீடுகள் உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -