- Advertisement -
நிலவின் தென் துருவத்தில் கடந்த ஆக .23ம் தேதியில் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கி ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்து வரும் லேண்டரிடமிருந்து பல புகைப்படங்கள், சில தகவலை அவ்வப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்படி லேண்டர் அனுப்பிய தகவலின்படி, நிலவில் 158 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நிலவில் இவ்வளவு வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தனர். மேலும், அங்கு 68- 86 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை இருக்கும் எனக் கணித்ததாகவும் கூறினர். இத்தகவல் விஞ்ஞான உலகிற்குப் புதிது என்றனர்.
- Advertisement -