- Advertisement -
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சுமார் 442 பொறியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளில் சேர மாணவர்களுக்கு 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், இதுவரை 1,06,641 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 50,737 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு செப். 6 முதல் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Advertisement -