- Advertisement -
கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக.29) சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அருணா சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், சென்னையில் ஏராளமான கேரள மக்கள் வசிப்பதால், அவர்கள் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வேலைநாளாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம், ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- Advertisement -