- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தாண்டு வரும் காலாண்டு விடுமுறையில் 1 முதல் 3ஆம் வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற செப்.23 ஆம் தேதி முதல் அக்.2 ஆம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல், 4 முதல் 12ஆம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு வருகின்ற செப்.28 முதல் அக்.2 ஆம் தேதி வரை என 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருகின்ற அக்.3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதேசமயம், தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது. ஆனால் மற்ற வகுப்புகளுக்கு இன்னும் காலாண்டு தேர்வு நடக்கவில்லை. ஆகவே, இந்த காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் 2ஆவது வாரம் முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -