- Advertisement -
தெற்கு பெங்களூரு பகுதியில், கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவ் – தேவி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தேவி சில நாட்களாக வேறொரு நபருடன் பேசுவதாக திடீரென சந்தேகம் கொண்ட வைஷ்ணவ், தேவிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஆக.26ம் தேதியும் வழக்கம் அந்த சந்தேகத்தால் இதுபோல் தேவிடம் சண்டை ஏற்பட, அப்போது உச்சக்கட்ட ஆத்திரத்தில் வைஷ்ணவ், தேவியை பிரஷர் குக்கரால் தாக்கியதில் தேவி படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த காதலன் உயிருக்குப் பயந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், அந்த காதலன் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடிக் கண்டு பிடித்து தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
- Advertisement -