- Advertisement -
நிலவு குறித்து ஆய்வு செய்துவரும் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி அதன் மேற்பரப்பிலிருந்து அதன் ஆழம் வரை லேசர் கருவிகள் மூலம் சில ஆய்வை செய்துள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் 0 டிகிரி கோணத்தில் இருக்கும்போது அதன் வெப்பநிலையில் 50 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
மேலும் ஆழம் செல்ல செல்ல படிப்படியாக வெப்பநிலை குறைந்து மைனஸ் 10 டிகிரி செல்சிஸாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் ரோவர் செல்லும் வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பது தெரிய வந்ததால், வேறு பாதையில் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. பிறகு பள்ளத்தைத் தவிர்த்து சமதளப் பாதையைக் கண்டறிந்து ரோவர் நகர்ந்து சென்றது. இதுகுறித்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது இஸ்ரோ. அது தற்போது வைரலாகி வருகிறது
- Advertisement -