- Advertisement -
இந்தியாவில் உள்ள மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனையடுத்து, இந்த பண்டிகை காலம் முன்னிட்டு அதிகரிக்கும் பயணிகளால் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை – திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,225. ஆனால், தற்போது ரூ.11,000 முதல் ரூ.19,089 வரை உயர்ந்துள்ளது.
- Advertisement -